
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசா புரி கடற்கரையில் 23,436 ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானின் சிற்பத்தை ஒடிசா மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.
மணலில் ஒன்பது அடி உயரமும், 18 அடி அலகமும் கொண்ட சிவபெருமான் சிலையை செய்துள்ளார். 12 டன் மணலைப் பயன்படுத்தி, ஆறு மணி நேரத்தில் தனது கலைப்படைப்பை முடித்ததாகக் கூறினார். அவர் முதன்முறையாக தனது வடிவமைப்பில் ருத்ராட்ச மணிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
மகா சிவராத்திரியன்று பல பக்தர்கள் புரி நகருக்கு வருகை தருவர். உக்ரைன் போர் நடைபெற்று வருகின்றது. உலக அமைதிக்காக சிவபெருமானை பிரார்த்திக்கிறேன் என்ற செய்தியை மணலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, பட்நாயக் தனது மணல் கலைப்படைப்புகளுக்கு ஒரு தனித்துவத்தை வழங்கக் காய்கறிகள் மற்றும் சிவப்பு ரோஜாக்களைப் பயன்படுத்தினார்.
சுதர்சன் பட்நாயக், பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து மணல் சிற்பங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். அவரின் மணல் சிற்பங்கள் பார்வையாளர் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.