இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

'உக்ரைனில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்?' - மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்? பகுதி வாரியாக அவர்களை மீட்கும் திட்டம் என்ன? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
Updated On :2 மார்ச் 2022, 9:43 am

DIN

உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்? பகுதி வாரியாக அவர்களை மீட்கும் திட்டம் என்ன? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தில் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் விமானங்களுடன் இன்று முதல் இந்திய விமானப்படை விமானங்களும் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கியுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'உக்ரைன் போர் குறித்த மேலும் சோகத்தைத் தவிர்க்க,

1. உக்ரைனில் இருந்து எத்தனை மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்?
2. உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்?
3. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு பகுதி வாரியான விரிவான திட்டம் 

ஆகிய மூன்று கேள்விகளுக்கும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இதுகுறித்த அரசின் திட்டம் மற்றும் தகவல் தொடர்பு ஏற்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.