உக்ரைனிலிருந்து செல்ல நண்பர்களுடன் தாயகம் திரும்புவோர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டில் சிக்கித் தவிப்போரை தாயகம் கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரைனிலிருந்து செல்ல நண்பர்களுடன் தாயகம் திரும்புவோர்
உக்ரைனிலிருந்து செல்ல நண்பர்களுடன் தாயகம் திரும்புவோர்
Updated on
1 min read


காஸியாபாத்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டில் சிக்கித் தவிப்போரை தாயகம் கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, தங்களுடன் வளர்ப்புப் பிராணிகளையும் விமானத்தில் ஏற்றிக் கொண்டு வரும் இந்தியர்களையும் பார்க்க முடிகிறது.

வேலைக்காகவோ, படிப்புக்காகவோ உக்ரைன் சென்றிருக்கும் இந்தியர்கள், அங்கு ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்புப் பிராணிகளை பிரிய மனமில்லாமல், அவற்றையும் சேர்த்து அணைத்தபடி விமானத்துக்குள் நுழைவோரையும் பார்க்க முடிகிறது.

உக்ரைனின் தலைநகர் கீவ் நகரிலிருந்து மீட்கப்பட்ட இந்தியரான கௌதம், தனது பூனையுடன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வியாழக்கிழமை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக விமானத்தில் அவர் தாயகம் அழைத்து வரப்படுகிறார்.

இது குறித்து கௌதம் கூறுகையில், தான் இந்த பூனையை கடநத் நான்கு மாதங்களாக வளர்த்து வருவதாகவும், உக்ரைனில் போர் மூண்டதும், தன்னுடன் இந்த பூனையும் சுரங்கப் பாதை உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழிகளில் வசித்து வந்ததாகவும், உக்ரைனிலிருந்து போலந்துக்கு எல்லைத் தாண்டி தன்னுடன் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதுபோல, ஸாஹித் என்ற இந்தியர், தனது நண்பர் வளர்த்து வந்த நாயை தன்னுடன் இந்தியா அழைத்து வருகிறார். இது பற்றி அவர் கூறகையில், நிறைய பேர் தாங்கள் வளர்த்து வந்த வளர்ப்புப் பிராணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். ஆனால், என்னால் அப்படிச் செல்ல முடியாது. நான் இந்த நாயை என்னுடன் அழைத்துச் செல்வேன் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com