சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உ.பி.யில் காலை 9 மணி நிலவரப்படி 9% வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
கோப்புப்படம்
Updated On :3 மார்ச் 2022, 5:49 am

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

இந்தக் கட்டத்தில் அம்பேத்கா் நகா், பல்ராம்பூா், குஷிநகா் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பஸ்தி 9.88 சதவீதம், குஷிநகரில் 9.64 சதவீதம், அம்பேத்கர்நகரில் 9.46 சதவீதம், கோரக்பூரில் 8.96 சதவீதம், சாந்த் கபீர் நகரில் 6.80 சதவீதம், பல்லியாவில் 7.57 சதவீதம் திவாகியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இறுதிகட்டத் தேர்தல் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.