மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகல்பூரில் வெடிவிபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலி

பிகாரின் பாகல்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியானார்கள்.

News image
Updated On :4 மார்ச் 2022, 10:57 am

பிகாரின் பாகல்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியானார்கள்.
பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்வலிசக் பகுதியில் வீடு ஒன்றில் நேற்றிரவு  11.45 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட இதுவரை 7 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட வீடு முற்றிலும் தரைமட்டமானது. 
மேலும் அருகிலிருந்த 3 வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். 
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டரில், “பிகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த குண்டுவெடிப்பால் உயிர் இழப்பு செய்தி வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த சம்பவம் தொடர்பான நிலைமை குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசினேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.