உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவியை மீட்டது இந்தியா
உக்ரைன்-ரஷியா இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் மாணவி ஒருவர் இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.


உக்ரைன்-ரஷியா இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் மாணவி ஒருவர் இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் மாணவி அஸ்மா ஷபீக், உக்ரைனில் இருந்து வெளியேற்றுவதற்காக மேற்கு உக்ரைனுக்கு செல்லும் வழியில் உள்ளதாகவும், அவர் விரைவில் தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மாணவி ஷபீக், "மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்த எங்களுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்த கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், எங்களை ஆதரித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியரால் நாங்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவோம்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர் இந்தியாவால் மீட்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, பங்களாதேஷை சேர்ந்த ஒருவரை மீட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, பின்னர் அவர் 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் இந்திய விமானத்தில் வருவார் என்றும் தெரிவித்தது.
இந்திய அதிகாரிகளால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட முதல் பங்களாதேஷை சேர்ந்த ரோஷன் ஜா, இந்திய அரசின் உதவிக்காக தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாக தி காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.
பின்னர், போலந்தில் இருந்து பங்களாதேஷை சேர்ந்த மேலும் 7 பேரை இந்திய அரசு மீட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியவர்களை மீட்பதற்காக 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ், பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கிய சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...