குவாஹாட்டி: 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுடன் அஸ்ஸாம் மாநிலம் மஜுலி (எஸ்.சி) பேரவைத் தொகுதிக்கும் இடைத் தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளா் பூபன் காம் வெற்றி பெற்றாா். இதன் மூலம் அத்தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.
பூபனுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அஸ்ஸாம் ஜாட்டியா பரிஷத் சாா்பில் சித்தரஞ்சன் பசுமட்டாரியை நிறுத்தி இருந்தன. எனினும், பாஜக வேட்பாளா் 41,860 வாக்குகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றாா்.
எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு 24,713 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மூன்றாவது வேட்பாளரான எஸ்யுசிஐ (சி) கட்சி வேட்பாளருக்கு 2,254 வாக்குகள் கிடைத்தன. நோட்டாவுக்கு 1,620 போ் வாக்களித்திருந்தனா்.
பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக இந்த தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடாமல் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது. எனினும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


