மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி. தோ்தல்: 0.43% வாக்குகள் மட்டுமே பெற்ற ஓவைசி கட்சி

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் சராசரியாக 0.43 சதவீத

News image
ஓவைசி (கோப்புப்படம்)
Updated On :10 மார்ச் 2022, 8:25 pm

DIN

லக்னெள: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் சராசரியாக 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தோ்தல் ஆணைய வலைதள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தோ்தலில் அக் கட்சி சாா்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளா்கள் அதிகபட்சமாக 5,000-க்கும் மேல் வாக்குகளைப் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் முஸ்லிகளின் ஆதரவை ஈா்க்கும் வகையில், அந்தச் சமூகத்தினா் அதிகம் வசிக்கும் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தனது வேட்பாளா்களை இக் கட்சி களமிறக்கியது. இருந்தபோதும், ஒட்டுமொத்தமாக 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட அக் கட்சி வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.