பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

'காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி மாறும்' - எம்எல்ஏ ராகவ் சதா

நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி மாறும் என ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 மார்ச் 2022, 5:13 am

நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி மாறும் என ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. 

இதில் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. 

காலை 10. 30 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 83 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சதா கூறுகையில், 'பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்கத் தயாராக உள்ளோம். ஆம் ஆத்மி உயரும்போது பிற வலிமையான சிம்மாசனங்கள் அசைக்கப்படுகின்றன. ஏனெனில் ஆம்  ஆத்மி ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெறவில்லை. அது ஒரு தேசிய கட்சியாக மாறியுள்ளது. நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறும்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.