பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

News image

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி

Updated On :10 மார்ச் 2022, 10:54 am


சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

பர்னாலா மாவட்டம் பதௌர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் உகோக்கிடம் சரண்ஜித் சிங் தோல்வியைத் தழுவினார். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட உகோக், 37,556 வாக்குகள் வித்தியாசத்தில் சன்னியை தோற்கடித்துள்ளார்.

அதுபோல, சன்னி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான ரூப்நகர் மாவட்டம் சம்கௌர் சாஹிப் தொகுதியிலும், ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். சரண்ஜித் சிங் 50 ஆயிரம் வாக்குகள் பெற, அவரது பெயரிலேயே போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் 54 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

பஞ்சாப் மக்கள் அளித்திருக்கும் இந்த தீர்ப்பை தான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.