ராஜஸ்தானில் பேருந்து-டிராக்டர் மோதி விபத்து: 21 பயணிகள் காயம்
ராஜஸ்தான், பாரான் மாவட்டத்தில் தனியார் பேருந்து டிராக்டர் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 21 பயணிகள் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


ராஜஸ்தான், பாரான் மாவட்டத்தில் தனியார் பேருந்து டிராக்டர் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 21 பயணிகள் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் பாரான் மாவட்டத்தில் என்.எச்-27 நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, கடுகு ஏற்றிச் சென்ற டிராக்டர், தவறான பக்கத்திலிருந்து, வேகமாக வந்து பேருந்து மீது மோதியது.
மோதாமல் தவிர்க்கும் முயற்சியில் பேருந்து ஓட்டுநர் அங்குள்ள டிவைடரில் மோதியதால் பேருந்து கவிழ்ந்தது.பேருந்தில் 4 வயதுக் குழந்தை உள்பட 21 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் பாரான் மாவட்ட மருத்துவமனையில் முதன்மை மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...