பஞ்சாபில் வெற்றிக் கனியை ருசிபார்த்த ஆம் ஆத்மி: அடுத்த இலக்கு இவர்களா?

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாபில் வெற்றிக் கனியை ருசிபார்த்துவிட்ட ஆம் ஆத்மி கட்சி, அதே வேகத்தில் தென்னக மாநிலங்களை நோக்கித் தனது பார்வையை திருப்பியுள்ளது.
பஞ்சாபில் வெற்றிக் கனியை ருசிபார்த்த ஆம் ஆத்மி: அடுத்த இலக்கு இவர்களா?
பஞ்சாபில் வெற்றிக் கனியை ருசிபார்த்த ஆம் ஆத்மி: அடுத்த இலக்கு இவர்களா?


புது தில்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாபில் வெற்றிக் கனியை ருசிபார்த்துவிட்ட ஆம் ஆத்மி கட்சி, அதே வேகத்தில் தென்னக மாநிலங்களை நோக்கித் தனது பார்வையை திருப்பியுள்ளது.

தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில், ஆம் ஆத்மி கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான திட்டத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் நிலையில், தென் மாநில மக்களும் எங்களது கட்சி மீது ஆர்வம் காட்டுகிறார்கள். தென்னிந்திய மாநிலங்களில் இருந்து எதிர்பாராத வகையில் பல ஆதரவுக் குரல்கள் வந்தவண்ணம் உள்ளது என்கிறார்.

தற்போது மக்களிடையே ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தை எங்கள் குழு சரியாக கணித்து, விரைவில் தென்னிந்திய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தைத் தொடங்கவிருக்கிறது.  இந்த திட்டத்தை, ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் குழுக்கள் மேற்கொள்ளவிருக்கின்றன.

 இந்த உள்ளூர் குழுவினர், தெலங்கானா, ஆந்திரம், தமிழகம், கேரளம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார், லட்சத்தீவுகள் பகுதியில் மிகத் தீவிரமாக செயல்பட்டு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக செயல்படுவாக்ரள்.

நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று கருதுபவர்கள் அனைவருமே ஆம் ஆத்மி கட்சியில் இணைய முன்வர வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். இது ஒரு மாபெரும் புரட்சியின் ஒரு பகுதி என்றும் சோம்நாத் பாரதி குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த நடைப்பயண திட்டம் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல்கட்டமாக தெலங்கானாவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியையும் நாங்கள் எட்டுவோம். இந்த நடைப்பயிற்சியின் மூலம், அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் கோட்பாடு மற்றும் அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் கொள்கைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சோர்ப்போம் என்கிறார்.

ஏற்கனவே, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகம் மற்றும் தெலங்கானாவில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும் கூட, அதனால் வெற்றிக் கணக்கைத் தொடங்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com