தில்லி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு  நிவாரண நிதி: கேஜரிவால்

தில்லி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு  நிவாரண நிதி: கேஜரிவால்

வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியை முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். 
Published on

வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியை முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

தில்லியின் கோகல்புரி குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஏராளமான குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். 

தில்லி முதல்வர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். 

இந்த துயர சம்பவம் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், இறந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்ச ரூபாயும், தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் அரசிடமிருந்து வழங்கப்படும் என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், இழப்பீடு தொகையை விரைந்து வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com