தில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். 
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். 

நடத்துமுடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து 255 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

முதல்வராக இருந்த யோகி ஆதித்யநாத் நேற்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் அளித்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய அரசு அமையும் வரை யோகி ஆதித்யநாத்தை காபந்து முதல்வராக செயல்பட வேண்டுகோள் விடுத்தாா்.

அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாம் முறையாக பதவியேற்பார் என்று தெரிகிறது. 

உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றியை அடுத்து,  யோகி ஆதித்யநாத் நாளை தில்லி செல்ல உள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். 

உ.பி.யில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவும் அமைச்சரவை குறித்து விவாதிக்கவும் செல்வதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com