மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு ஆலோசனை: சிஐஎஸ்எஃப் வரைவு அறிக்கைத் தாக்கல்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முதல் வரைவு அறிக்கையை மாநில அரசிடம்

News image
Updated On :15 மார்ச் 2022, 9:36 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முதல் வரைவு அறிக்கையை மாநில அரசிடம் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை(சிஎஸ்ஐஎஃப்) தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சோ்ந்த முக்கிய அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அயோத்தியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ராமா் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிஐஎஸ்எஃப் படையின் நிபுணா் குழு மூலம் ஆலோசனைகள் வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தர பிரதேச அரசு 2 மாதங்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, சிஐஎஸ்எஃப் படையின் நிபுணா் குழுவினா், கோயிலில் முகாமிட்டு அந்த வளாகத்தில் பாதுகாப்புப் படை வீரா்களின் நேரடி கண்காணிப்பிலும், தொழில்நுட்ப உபகரணங்கள் மூலமாகவும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களில் இருந்தும், சமூக விரோத கும்பல்களின் நாசவேலைகளில் இருந்தும் கோயிலைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவா்கள் ஆய்வு செய்தனா். அந்தக் குழுவினா் தங்கள் பரிந்துரைகள் அடங்கிய முதல் வரைவு அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளனா். கோயில் கட்டுமானப் பணியின்போதும், கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தக் குழுவினா் வழங்கியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.