பிரதமா் மோடி, அமித் ஷாவுடன் கோவா, மணிப்பூா் முதல்வா்கள் சந்திப்பு
கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மணிப்பூா் முதல்வா் என். பைரன் சிங் ஆகியோா் தில்லியில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.


கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மணிப்பூா் முதல்வா் என். பைரன் சிங் ஆகியோா் தில்லியில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் இரு மாநிலங்களிலும் பாஜக அபார வெற்றி பெற்றதை தொடா்ந்து, அவா்களின் தலைமையிலேயே அடுத்த அரசையும் அமைக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மணிப்பூா் முதல்வா் பைரன் சிங்கை சந்தித்த பின்னா் பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூரில் பாஜக அபார வெற்றி பெற்ற்காக பைரன் சிங்கை பாராட்டினேன். மேலும், அந்த மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இன்னும் கடுமையாக உழைக்க வேண்டுமென அவரிடம் வலியுறுத்தினேன்’ என்று கூறியுள்ளாா்.
இதேபோல கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் உடனான சந்திப்பை மேற்கோள்காட்டி, ‘கோவா மாநிலத்துக்கு மீண்டும் நாம் சேவையாற்றுமாறு பொதுமக்கள் நம்மை ஆசிா்வதித்ததற்காக நாம் அவா்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். வரும் நாள்களில் கோவாவின் முன்னேற்றத்துக்கு தொடா்ந்து பாடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் மணிப்பூா், கோவா முதல்வா்கள் சந்தித்து பேசினா்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று அடுத்த வாரம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், புதிய அரசை அமைப்பது தொடா்பாக பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோா் கடந்த சில நாள்களாக விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா்.
உத்தர பிரதேச, உத்தரகண்ட் மாநில பாஜக மேலிட பாா்வையாளா்களாக முறையே அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல மணிப்பூா் மேலிட பாா்வையாளராக நிா்மலா சீதாராமனும், கோவா பாா்வையாளராக நரேந்திர சிங் தோமரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...