தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வெளிநாட்டினருக்கான விசா தடை நீக்கம்: மத்திய அரசு

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2022, 4:00 pm

DIN


கரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினருக்கான விசா வழங்க மத்திய அரசு தடை விதித்தது. தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, பல்வேறு நாடுகள் விசாவுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. இந்த வரிசையில், இந்தியாவும் விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கியுள்ளது.

156 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 5 ஆண்டுகளுக்கான இ-சுற்றுலா விசாவிற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் நீண்ட கால (10 ஆண்டுகள்) சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.