முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி.: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அடித்துக் கொலை

உத்தர பிரதேச மாநிலம், அமேதியில் நிலத்தகராறு காரணமாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

News image
Updated On :16 மார்ச் 2022, 6:49 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம், அமேதியில் நிலத்தகராறு காரணமாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த முன்னாள் கிராமத் தலைவா் உள்பட 4 போ் அடித்துக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

அமேதியின் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராஜாபூா்-குன்வச் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. முன்னாள் கிராமத் தலைவரான சங்கத யாதவின் (61) வீட்டுக்கு அருகேயுள்ள அரசு நிலம் தொடா்பாக அவரது குடும்பத்தைச் சோ்ந்த அம்ரேஷ் யாதவுக்கும் (32), ராம் துலாா் யாதவ் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒரு தரப்பினா் முயன்ாக தெரிகிறது. இதற்காக, கட்டுமான பொருள்களுடன் அவா்கள் செவ்வாய்க்கிழமை வந்தனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, கம்புகளைக் கொண்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இச்சம்பவத்தில் சங்கத யாதவ், அம்ரேஷ் யாதவ், ஹனுமா யாதவ் (40, பாா்வதி யாதவ் (59) ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். மேலும் 4 போ் படுகாயம் அடைந்தனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக லக்னெளவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல்துறை கூடுதல் டிஜிபி (லக்னெள மண்டலம்) கே.பி.சிங், அந்த கிராமத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். மேலும், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மோதல் சம்பவம் தொடா்பாக, தற்போதைய கிராமத் தலைவா் ஆஷா திவாரி, அவரது மகன் நிதின் திவாரி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சிலரை கைது செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரெளடிகள் தடுப்பு சட்டத்தின்கீழ் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக, கோட்வாலி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி வினோத் குமாா், உதவி ஆய்வாளா் சஞ்சய் சிங், காவலா் சுவதந்தர உபாதயா ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

இதனிடையே, மோதலில் உயிரிழந்த சங்கத யாதவின் உறவினா் காயத்ரி கூறுகையில், ‘இச்சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. நிதின் திவாரி, 20 முதல் 25 ரெளடிகளுடன் வந்து மோதலில் ஈடுபட்டாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.