நாட்டில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா; 60 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,538 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 4,491 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,16,132ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,24,54,546 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | சோனியா காந்தியுடன் இன்று குலாம் நபி சந்திப்பு
இன்றைய நிலவரப்படி 30,799 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...