தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி மாநகராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த

News image
உச்சநீதிமன்றம்
Updated On :17 மார்ச் 2022, 12:53 pm

DIN

புதுதில்லி: தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி)  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தில்லியில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட நகராட்சிகளை இணைக்க மத்திய அரசு சட்டம் இயற்ற முயற்சிப்பதாக, தில்லி மாநில தேர்தல் ஆணையம்  தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்தது

ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர்கள் அங்குஷ் நரங் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் மே 2022-ல் முடிவதற்குள், மாநிலத் தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் திட்டமிட்ட அட்டவணையின்படி தில்லியில் மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியது.

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், மேலும் அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் ஏப்ரல் 2022-ல்  நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.