உ.பி.: சாலை விபத்து: 2 பேர் பலி, 4 பேர் காயம்
கரன்பூர் ரேஷாம் பண்ணை அருகே ஹோலி கொண்டாட 2 பைக்குகளில் 6 பேர் பயணம் செய்து கொண்டுருந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றையொன்று மோதிக் கொண்டது.


உ.பி: கரன்பூர் ரேஷாம் பண்ணை அருகே ஹோலி கொண்டாட 2 பைக்குகளில் 6 பேர் பயணம் செய்து கொண்டுருந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றையொன்று மோதிக் கொண்டது.
இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.
குடிபோதையில் இருந்த அம்ரேஷ் திவாரி (30) மற்றும் மகேஷ் சிங் (28) ஆகியோர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உள்ளூர் மக்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் திவாரி மற்றும் சிங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...