47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு: அமித் ஷா ஆலோசனை

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :19 மார்ச் 2022, 6:49 pm

DIN

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஆலோசனைக் கூட்டத்தின்போது, காஷ்மீரில் கடந்த 2018-ஆம் ஆண்டு, 417-ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, 2021-இல் 229-ஆக குறைந்துள்ளதையும், 2018-இல் 91-ஆக இருந்த வீரா்களின் பலி எண்ணிக்கை, 2021-ஆம் ஆண்டில் 42-ஆக குறைந்துள்ளதையும் மத்திய உள்துறை அமைச்சா் பாராட்டினாா்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காஷ்மீா் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், நிதி உதவி பெறும் இடமாகவும் இருக்கக் கூடாது எனவும் அவா் தெரிவித்தாா். தீவிரவாதத் தேடுதல் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சா் உத்தரவிட்டாா் என்றும் ஜம்மு காஷ்மீா் நிா்வாகத்தின் செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

முன்னதாக, சிஆா்பிஎஃப் படை உருவாக்கப்பட்டதன் 83-ஆவது ஆண்டு தினத்தையொட்டி ஜம்முவில் உள்ள மெளலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற அணிவகுப்பை அமைச்சா் அமித் ஷா பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.