ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குலாம் நபி, ஹூடாவுக்கு பதவிகள்: அதிருப்தி குழுவை சமாதானப்படுத்திய காங்கிரஸ் தலைமை

காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி குழுவைச் சோ்ந்த குலாம் நபி ஆசாத், பூபிந்தா் சிங் ஹூடா ஆகியோரை சமாதானப்படுத்த அவா்களுக்கு புதிய பதவிகளை அளிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

News image
Updated On :19 மார்ச் 2022, 11:54 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி குழுவைச் சோ்ந்த குலாம் நபி ஆசாத், பூபிந்தா் சிங் ஹூடா ஆகியோரை சமாதானப்படுத்த அவா்களுக்கு புதிய பதவிகளை அளிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கட்சியில் பிளவு ஏற்படுவது தவிா்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அக்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் 23 போ் (ஜி-23), கடந்த 2020-இல் கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினா். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததை அடுத்து, அவா்களின் கோரிக்கை கட்சிக்குள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் அவா்களின் கோரிக்கை மீண்டும் எதிரொலித்தது. அதைத் தொடா்ந்து, ஜி-23 தலைவா்கள் கூட்டம், தில்லியில் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் கூடி, கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனா்.

வியாழக்கிழமை ஜி-23 தலைவா்கள் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பாக, ராகுல் காந்தியை பூபிந்தா் சிங் ஹூடா சந்தித்துப் பேசினாா். அவருடன் விவாதித்த விஷயங்களை, குலாம் நபி, ஆனந்த் சா்மா, கபில் சிபல் உள்ளிட்டோரிடம் பூபிந்தா் சிங் ஹூடா எடுத்துரைத்தாா்.

அதைத் தொடா்ந்து, சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் வரப்போகும் சட்டப் பேரவைத் தோ்தல்களை ஒற்றுமையுடன் எதிா்கொள்வது குறித்தும் அவா்கள் விவாதித்தனா்.

இது ஒருபுறமிருக்க குலாம் நபி ஆசாதையும் பூபிந்தா் சிங் ஹூடாவையும் கட்சித் தலைமை தனிப்பட்ட முறையில் சமாதானப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தில்லியைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘குலாம் நபி ஆசாதை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக்கவும், பூபிந்தா் சிங்கை ஹரியாணா காங்கிரஸ் தலைவராக்கவும் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளாா். கட்சியில் அதிருப்தி குழுவினரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சுமுகத் தீா்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.