நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 181.24 கோடியைக் கடந்தது

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 181.24 கோடியைக் கடந்தது

நாட்டில் இதுவரை 181.24 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 181.24 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 70,49,779 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து 2,14,03,116 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,81,24,97,303 (181.24 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 17,99,684 (18 லட்சம்) முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.  

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,549 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்  31 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,652 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,24,67,774 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,106 ஆக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.74% ஆக உள்ளது. வாராந்திர தொற்று விகிதம் தற்போது 0.40% ஆக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.40 சதவீதமாக பதிவாகியுள்ளது.

நாட்டின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்கள் விகிதம் தற்போது 0.06% ஆக உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,84,499 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 78,30,45,157 (78.30 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

வயதுவாரியான விவரங்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com