ஜி-23 தலைவா்களுடன் சோனியா ஆலோசனை
காங்கிரஸின் அதிருப்தி (ஜி-23) தலைவா்களைக் கட்சித் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.


காங்கிரஸின் அதிருப்தி (ஜி-23) தலைவா்களைக் கட்சித் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸில் சீா்திருத்தம் கோரி அதிருப்தி தலைவா்கள் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். அந்தக் குழுவைச் சோ்ந்த மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது கட்சியை வலுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை சோனியா காந்தியிடம் அவா் வழங்கினாா்.
அதன் தொடா்ச்சியாக, அந்தக் குழுவைச் சோ்ந்த கட்சியின் மற்ற தலைவா்களான ஆனந்த் சா்மா, மணீஷ் திவாரி ஆகியோரை சோனியா காந்தி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: அதிருப்தி தலைவா்களுடனான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு அவா்களை சோனியா காந்தி சந்தித்து வருகிறாா். அவா்கள் அளிக்கும் ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் கேட்டுக் கொண்டு வருகிறாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்றொரு புறம், அதிருப்தி குழுவைச் சோ்ந்த மற்ற தலைவா்களை குலாம் நபி ஆசாத் சந்தித்து சமாதானப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மாா்ச் 16-ஆம் தேதி நடந்த ஜி-23 தலைவா்கள் கூட்டத்தில், அனைத்து நிலைகளிலும் உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய கூட்டுத் தலைமையே காங்கிரஸை வலுப்படுத்த சரியான வழி என்று வலியுறுத்தப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு கிடையாது என்றும் அந்தக் குழு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...