பிகாரில் இஸ்லாமிய குடும்பத்தினர் ராமர் கோயில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.
பிகார் தலைநகர் பாட்னைச் சேர்ந்த கேசரியா பகுதியில் உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தளமாக ‘விராட் ராமாயண் மந்திர்’ ஹிந்து கோயில் விரைவில் கட்டப்பட உள்ளதால் அதற்கான நன்கொடைகளைப் பலரும் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாட்னாவைச் சேர்ந்த இஸ்லாமியக் குடும்பம் தங்களுக்குச் சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை ‘விராட் ராமாயண் மந்திர்’கட்ட நன்கொடையாக அளித்துள்ளனர்.
இதுகுறித்து அக்குடும்பத்தினர் சார்பில் பேசிய, இஸ்தியாக் அகமது கான் என்பவர் ‘கோயில் அமைய இருக்கும் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்கள் என் குடும்பத்திற்குச் சொந்தமானது. கோயிலைக் கட்டுவதற்கு இந்த இடத்தை நன்கொடையாகக் கொடுப்பது எங்களின் கடமையாகவே கருதுகிறேன்’ எனத் தெரிவித்தார்.
ரூ.500 கோடி செலவில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கும் ‘விராட் ராமாயண் மந்திர்’ கோயில் 18 ஹிந்து கடவுள்களைக் கொண்டு உருவாக இருந்தாலும் ராமர் மற்றும் சீதாவை முன்னிலைப்படுத்தும் வகையிலேயே இந்தக் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாக்ஸிக் முதல் பாடல் எப்போது? கியாரா அத்வானி வெளியிட்ட போஸ்டர்!
குடும்ப பிரச்னை: மகனை கொலை செய்த தாய் தற்கொலை முயற்சி
சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

விவாகரத்து கோரும் விஜய் மனைவி சங்கீதா!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

