
புது தில்லி: மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்குத் தேவையான சுமார் 89% நிலம் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
மும்பை-ஆமதாபாத் அதிவேக இரயில் (எம்.ஏ.எச்.எஸ்.ஆர்) திட்டத்தை குறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு "மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், ஒப்பந்தங்களை முடிப்பதில் தாமதம் மற்றும் கரோனா தாக்கம் ஆகியவற்றால் தாமதமானது" என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
எம்.ஏ.எச்.எஸ்.ஆர் திட்டத்திற்குத் தேவையான 1,396 ஹெக்டேர் நிலத்தில் சுமார் 89 சதவீதம், தோராயமாக 1,248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.