லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம்:போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் கோரி, விவசாய அமைப்பினா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக முன்னாள் எம்.பி.யும்,

News image
Updated On :23 மார்ச் 2022, 8:03 pm

DIN

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் கோரி, விவசாய அமைப்பினா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக முன்னாள் எம்.பி.யும், சுவாபிமானி பக்ஷா கட்சித் தலைவருமான ராஜூ ஷெட்டி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் பெற விவசாயிகள் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து ராஜூ ஷெட்டி தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

எம்எஸ்பி உத்தரவாத கிசான் மோா்ச்சா என்ற அமைப்பின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக தில்லியில் 3 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில், எம்எஸ்பி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொள்வேம்.

விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்க வேண்டுமென ஒவ்வொரு கிராம சபையிலும் விவசாயிகள் தீா்மானம் நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். கரும்பு உற்பத்தியாளா்களுக்கு நியாயமான விலையை நிா்ணயித்ததைப் போல பிற விவசாயிகளுக்கும் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.