ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் உள்ள மரக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பிகாரைச் சோ்ந்த 11 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 11 புலம்பெயா் தொழிலாளா்கள் உடல்கள் இங்கிருந்து பாட்னாவுக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
11 புலம்பெயா் தொழிலாளா்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, காந்தி மருத்துவமனையில் இருந்து இங்குள்ள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அவர்களில் 6 பேரின் உடல்கள் இன்று காலை விமானம் மூலம் பாட்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 பேரின் உடல்களும் மற்றொரு விமானத்தில் இன்று பிற்பகல் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் பிகாருக்கு சென்றதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஹைதராபாத் நகரில் போய்குடா பகுதியில் மரக் கிடங்கு செயல்பட்டு வந்தது. அங்கு பழைய செய்தித்தாள்கள், கண்ணாடிப் பொருள்கள் உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை அதிகாலையில் அந்தக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்தக் கிடங்குக்கு மேலே கட்டப்பட்ட அறையில் தங்கியிருந்த புலம்பெயா் தொழிலாளா்கள் 11 போ் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.
தீ விபத்துக்கான சரியான காரணம் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பப்பு யாதவ் எம்.பி.யின் இல்லத்தில் கைகலப்பு: தில்லி காவல் துறையினா் வழக்குப்பதிவு

விவசாயிக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கஞ்சா விற்பனை 2 போ் கைது
திருட்டு வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



