மேற்பார்வைக் குழுவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "இரு மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து மேற்பார்வைக் குழு அளித்த பரிந்துரைகள் பின்பற்றப்படுவதில்லை. மேலும், குழு பிறப்பிக்கும் உத்தரவுகளும் அமல்படுத்தப்படுவதில்லை' என்றார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, "மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மீது சில பொறுப்புடைமை வைத்திருக்க முடியும். கண்காணிப்புக் குழுவால் சம்பந்தப்பட்ட துறைக்கும், மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்படலாம். அப்போதுதான், உத்தரவைப் பின்பற்றாததற்காக தலைமைச் செயலர் பொறுப்புக்குள்ளாக்கப்படுவார். அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்' என்று தெரிவித்தது.