இ-சஞ்சீவனி 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைப் பதிவு செய்து சாதனை
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொலைமருத்துவ சேவையான இ-சஞ்சீவனி 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.


மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொலைமருத்துவ சேவையான இ-சஞ்சீவனி 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இணைய வழி சுகாதாரப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தொலைமருத்துவ சேவை 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைத் தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 1.7 லட்சம் ஆலோசனைகளை வழங்கி இ-சஞ்சீவனி புதிய சாதனையையும் படைத்துள்ளது.
சில மாநிலங்களில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்தச் சேவை செயல்படுகிறது. மேலும் சில மாநிலங்களில் 24 மணி நேரமும் இயங்குகிறது. கரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது, பொதுமக்களுக்கு தொலைமருத்துவ சேவை கணிசமாகப் பங்களித்ததோடு மருத்துவமனைகளின் சுமையையும் குறைத்தது.
நோயாளிகள் காணொலி முறையில் தொலைதூரத்தில் உள்ள மருத்துவ நிபுணா்களிடம் ஆலோசனை பெற இது உதவியது. பயனாளிகளின் வீடுகளுக்குத் தரமான சுகாதார சேவைகளை கொண்டு செல்வதன் மூலம் கிராமப்புற - நகா்ப்புற இடைவெளியைக் குறைக்க இ-சஞ்சீவனி உதவியது.
மூன்று கோடி பயனாளிகளில், 2,26,72,187 போ் இ-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் தளம் மூலமாகவும், 73,77,779 போ் இ-சஞ்சீவனி புறநோயாளிகள் பிரிவு மூலமாகவும் ஆலோசனை பெற்றுள்ளனா். தேசிய தொலைமருத்துவ சேவையில் பயனாளிகளுக்கு சேவை செய்ய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.
இ-சஞ்சீவனி மருத்துவ ஆலோசனைகளைப் பயன்படுத்தியதில் ஆந்திர மாநிலம் முதலிடத்திலும், கா்நாடகம் இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும், உத்தர பிரதேசம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தின் மொத்த ஆலோசனைகளின் எண்ணிக்கை 18,56,861. இதில் இ-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் தளம் மூலமாக 1,52,721 ஆலோசனைகளும், இசஞ்சீவனி புறநோயாளிகள் பிரிவு மூலமாக 17,04,140 ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...