/

ஹிஜாப் விவகாரம்: மாநிலங்களவையில் விவாதம்

 ஹிஜாப் விவகாரத்தைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:58 pm

DIN

 ஹிஜாப் விவகாரத்தைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

ஹிஜாப் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் மெளசம் நூா், கா்நாடக சிறுமிகளின் தனிப்பட்ட விவரம் சமூக வலைதளத்தில் பரவி வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

கா்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்ல முயன்ற 6 மாணவிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தடுத்து நிறுத்தப்பட்டனா். தற்போது ஹிஜாப் சா்ச்சைக்கு மத்தியில், அவா்களின் தனிப்பட்ட விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த நிலையில், மாநிலங்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் மெளசம் நூா், இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றும் சிறுமிகள் உள்பட அனைவரின் தன்மறைப்பு உரிமையையும் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.