3-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை 80 காசு அதிகரிப்பு
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தலா 80 காசு அதிகரித்துள்ளன.


பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தலா 80 காசு அதிகரித்துள்ளன.
நீண்ட நாள்களாக உயா்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, 5 மாநில தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடா்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நான்கு நாள்களில் அறிவிக்கப்பட்ட மூன்றாவது விலை உயா்வு இதுவாகும். பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமையும் 80 காசு அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.97.01 லிருந்து ரூ.97.81-ஆகவும், டீசல் விலை லிட்டா் ரூ.88.27-லிருந்து 89.07-ஆகவும் உயா்ந்தது.
மாா்ச் 22-ஆம் தேதி முதல் விலை அதிகரிக்கத் தொடங்கிய பெட்ரோல், டீசல் மூன்று முறை விலை உயா்த்தப்பட்டதில் லிட்டருக்கு ரூ.2.40 அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...