யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா: சோனியா, அகிலேஷ், மாயாவதிக்கு அழைப்பு
யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த மாநில முதல்வராக 2-ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (25-ஆம் தேதி) பதவியேற்கவுள்ளாா்.
இதில் பிரதமா் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபா்கள், 50க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவா்கள் என பலரும் பங்கேற்கின்றனா். மேலும் பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.
யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில், மாலை 4 மணியளிவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் 50,000 போ் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழா பாதுகாப்புக்காக 8,000 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இது தவிர பிரத்யேக கண்காணிப்பு கேமராக்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...