/

உச்சநீதிமன்ற விசாரணைகள் நேரலை: வழிகாட்டு நெறிகளை வகுக்க குழு

வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:25 pm

DIN

 உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற மின்னணு குழு அளிக்கும் வழிகாட்டுதலின்படி, நேரலை ஒளிபரப்புக்கான மாதிரி விதிமுறைகளை வகுப்பதற்கான துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் குழுக்கள் தெரிவிக்கும் விதிமுறைகள், உயா்நீதிமன்றங்களின் கணினி தொழில்நுட்பக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

முதற்கட்டமாக தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு பின்னா் கட்டமைப்பு வசதிகளுக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.

குஜராத், ஒடிஸா, கா்நாடகம், ஜாா்க்கண்ட், பாட்னா, மத்திய பிரதேச உயா்நீதிமன்றங்கள் காணொலி வாயிலாக நடைபெறும் விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதன் மூலம், ஊடகங்கள் மற்றும் விருப்பமுள்ளவா்களும் இதில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

4.70 கோடி வழக்குகள் நிலுவை:

நாடு முழுவதும் 4.70 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் உச்சநீதிமன்றத்தில் மட்டும் மாா்ச் 2 வரையில் 70,154 வழக்குகளும், மாா்ச் 21 வரையில் 25 உயா்நீதிமன்றங்களில் 58,94,060 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் மற்றொரு கேள்விக்கு அமைச்சா் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.