தாணே: பசுமைக் கழிவு ஆலையில் தீ விபத்து
தாணேவின், கோப்ரி பகுதியில் மாநகராட்சியின் பசுமைக் கழிவு மேலாண்மை வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


தாணேவின், கோப்ரி பகுதியில் மாநகராட்சியின் பசுமைக் கழிவு மேலாண்மை வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்து அங்குள்ள வளாகம் முழுவதும் பரவியது. இதில் உலர்ந்த கழிவுகள், மரச்சாமான்கள், சேமிக்கப்பட்ட பச்சை கழிவுகள் உள்பட தீயில் எரிந்து நாசமானது.
சம்பவ இடத்துக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அதிகாலை 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட ஆலை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது, தீ விபத்துக்கான காரணம் குறித்து
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...