பாரம்பரிய மருத்துவத்தில் நம் வலிமையைக் காட்ட இது ஒரு வாய்ப்பு: மத்திய ஆயுஷ் அமைச்சர்

பாரம்பரிய மருத்துவத்தில் நம் வலிமையைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என உலக பாரம்பரிய மருத்துவ மையம் குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். 

குஜராத் ஜாம்நகரில் உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்க உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக  மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் இன்று தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி, இந்தியா உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாகவும் பாரம்பரிய நடைமுறைகளை மேலும் மேம்படுத்தவும் உதவும் என்று கூறினார். 

தொடர்ந்து, மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால், 'உலகிலேயே பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் ஒரே உலகளாவிய மையமாக இது இருக்கும். 

பாரம்பரிய மருத்துவத்தில் நமது வலிமையைக் காட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com