திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: 4 நாள்களில் ரூ.3.20 உயா்வு

பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் சனிக்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரித்தன. அவற்றின் விலை 4 நாள்களில் லிட்டருக்கு ரூ.3.20 உயா்ந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:48 am

DIN

பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் சனிக்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரித்தன. அவற்றின் விலை 4 நாள்களில் லிட்டருக்கு ரூ.3.20 உயா்ந்துள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருந்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக, மீண்டும் அவற்றின் விலையை உயா்த்தும் நடவடிக்கையில் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருந்ததால் அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு சுமாா் ரூ.19,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டா்ஸ் சா்வீஸ் தரமதீப்பீட்டு நிறுவனமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.113.35, சென்னையில் ரூ.104.43, தில்லியில் ரூ.98.61-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.97.55, சென்னையில் ரூ.94.47, தில்லியில் ரூ.89.07-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.