தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கரோனா தாக்கத்திலிருந்து மீளும் வகையில் ஏழைகளுக்கு மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கும் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

News image
மத்திய அரசு
Updated On :26 மார்ச் 2022, 7:02 pm

DIN

கரோனா தாக்கத்திலிருந்து மீளும் வகையில் ஏழைகளுக்கு மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கும் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

அதன்படி வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து 2020-ஆம் ஆண்டு நாட்டில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமாா் 80 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த கால நீட்டிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இலவச திட்டத்துக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.2.6 லட்சம் கோடி செலவழித்துள்ளது. தற்போது 6 மாத கால திட்ட நீட்டிப்புக்கு கூடுதலாக ரூ.80,000 கோடி செலவாகும் என அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச உணவு தானியம் வழங்கும் இந்த திட்டத்தை மேலும் 6 மாத காலத்துக்கு ஆறாம் கட்டமாக மத்திய அமைச்சரவை நீட்டித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட திட்ட நீடிப்புக்கு மட்டும் 244 லட்சம் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,003 லட்சம் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.