நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தாா். அதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மானியங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான விவாதம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியான நிதி ஒதுக்கீடு மசோதா, நிதி மசோதா ஆகியவற்றுக்கு மக்களவை கடந்த 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. அதையடுத்து அந்த மசோதாக்கள் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மசோதாக்களை ஆராய்ந்த மாநிலங்களவை, அவற்றில் எந்தவித திருத்தமும் செய்யாமல் மக்களவைக்குத் திருப்பி அனுப்பிவைத்துள்ளது.

இதன்மூலமாக அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது. நிதி மசோதாக்கள் மீது மாநிலங்களவைக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லை. மக்களவை அனுப்பி வைக்கும் நிதி மசோதாக்களில் மாநிலங்களவை திருத்தங்களை மேற்கொள்ளலாம். அந்தத் திருத்தங்களை மக்களவை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம்.

நிதி மசோதாக்களை மாநிலங்களவை கிடப்பில் போட்டுவைக்க முடியாது. 14 நாள்களுக்குள் மக்களவைக்கு அந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு அந்த மசோதாக்கள் அனுப்பிவைக்கப்படவில்லை எனில், அவற்றுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவே கருதப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com