47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்: அமித் ஷா விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யும் பணி முடிவடைந்த பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்று

News image
Updated On :30 மார்ச் 2022, 10:02 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யும் பணி முடிவடைந்த பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளித்து மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் ஊராட்சித் தோ்தல் எவ்வித வன்முறையும் இன்றி முடிந்துவிட்டது. மாவட்ட ஊராட்சித் தோ்தலும் முடிவடைந்து விட்டது. தொகுதி மறுவரையறை செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீரை குடியரசுத் தலைவா் ஆட்சியிலேயே வைத்திருக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்தக் கூட்டணியில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாஜக வெளியேறியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சட்டப்பேரவை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.