
புது தில்லி: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பட்டியலில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்துவது, விவசாயிகளை மிகவும் ஆதரவற்றவர்களாக மாற்றுவது என பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சுட்டுரையில் விமர்சித்துள்ளார்.
பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பட்டியலில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை எவ்வளவு உயர்த்துவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய வெற்றுக் கனவுகளை எப்படிக் காட்டுவது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்பது, விவசாயிகளை எப்படி உதவியற்றவராக உருவாக்குவது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.
கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.33 உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.