
உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 66 சதவீத சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தில் 31.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 58.52 லட்சம் டோஸ்களும், 15-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2.28 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.
18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 19.99 கோடி டோஸ்களும், 45-60 வயதுக்குட்பட்டவர்களுக்கு 6.12 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு 3.55 கோடி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
15-17 வயதுக்குட்பட்ட பிரிவில், 66 சதவீத சிறார்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12-14 வயது சிறார்களுக்கு 63 சதவீதம் முதல் டோஸ் எடுத்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 193 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளன. அதேசமயம் 159 நோயிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் 1,621 பேர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.