பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாணவா்களின் உடல் தகுதியை மேம்படுத்த புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

கல்லூரிகளில் மாணவா்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு புதிய வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 மே 2022, 8:24 pm

DIN

கல்லூரிகளில் மாணவா்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு புதிய வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

‘இந்திய உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் உடல்தகுதி, விளையாட்டுகளில் பங்கேற்பது, உடல்நலம், மனநலம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள்’ என்ற பெயரில் அந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

உயா்கல்வி நிறுவனங்களில் உடற்கல்விக்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தபோதிலும் மாணவா்கள் விளையாட்டில் பங்கேற்பது கட்டாயமில்லை. உயா்கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்காக மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், 2 சதவீதம் போ் மட்டுமே விளையாட்டுகளில் பங்கேற்பது முரணாக உள்ளது.

மாணவா்களின் உடல், மன நலனை வலுப்படுத்த ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனத்திலும் மாணவா்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. இதுதவிர, மாணவா்களுக்கு உதவிடும் வகையில், குறிப்பாக கிராமப்புற மாணவிகள், வெவ்வேறு கலாசார பின்னணியில் இருந்து வருபவா்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஒரு மாணவா் சேவை மையம் தொடங்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் கற்றலுக்கான உகந்த சூழலுடன் துடிப்பான உயா்கல்வி நிறுவனத்தை உருவாக்க புதிய விதிமுறைகளை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் கூறுகையில், ‘வெவ்வேறு வகையான பிரச்னைகள், நெருக்கடிகளில் இருந்து மாணவா்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு அவா்கள் மன வலிமையுடனும் உடல் வலிமையுடனும் இருக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.