நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடையிலேயே இப்படியா? ஹைதராபாத்தை வெளுத்து வாங்கிய மழை

கடுமையான சூறைக்காற்று, மின்னல், கொட்டித் தீர்த்த கனமழை.. இதுதான் ஹைதராபாத்தின் இன்றைய நிலவரம்.

News image

கோடையிலேயே இப்படியா? ஹைதராபாத்தை வெளுத்து வாங்கிய மழை

Updated On :4 மே 2022, 7:52 am

DIN

கடுமையான சூறைக்காற்று, மின்னல், கொட்டித் தீர்த்த கனமழை.. இதுதான் ஹைதராபாத்தின் இன்றைய நிலவரம். கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது.

ஹைதராபாத்தின் சித்திப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹப்ஷிபூர் பகுதியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 108 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. செகுந்தராபாத்தில் 72 மி.மீ. மழையும், பன்சிலால்பெட்டில் 67 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ஹைதராபாத் மட்டுமல்லாமல், சித்திபெட், ஜாக்டியால், மச்சேரியல், யாதாத்ரி புவனகிரி மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. 

மேலும், புதன்கிழமையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.