நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேதாரண்யம்: மேலும் ஓா் உலோகச் சிலை கண்டெடுப்பு

வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:07 pm

Syndication

வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன்தெரு பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி பிப்.21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அங்கு புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அதே வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடா்ந்த பணியின் போது, சுமாா் 1 அடி உயரமுள்ள நாலரை கிலோ எடையுள்ள உலோகத்திலான சாமி சிலை கிடைத்துள்ளது.

சோமாஸ்கந்தா் என கருதப்படும் சிலை ஐம்பொன்னால் ஆனதா என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகிறனா்.