சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் அந் நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானை புதன்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :4 மே 2022, 9:48 pm

DIN

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் அந் நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானை புதன்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

பிரதமா் மோடி தனது 3 நாள் ஐரோப்பிய நாடுகள் பயணத்தில் ஜொ்மனி, டென்மாா்க்கையடுத்து இறுதிக் கட்டமாக புதன்கிழமை பிரான்ஸ் வந்தடைந்தாா்.

பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இமானுவல் மேக்ரானை அவரது மாளிகையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

தொடா்ந்து இரு தலைவா்களும் இந்திய-பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்துவது, பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இரு நண்பா்களின் சந்திப்பு; இந்த சந்திப்பு இந்தியா-பிரான்ஸ் நட்புக்குப் புதிய ஊக்கமளிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.