புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 3,205 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 3,275 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3,010 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 3,275 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,91,391 ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 55 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,975 ஆக உள்ளது.
நேற்று ஒரேநாளில் 3,010 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,47,699 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது.
தற்போது 19,719 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.77 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.78 சதவிகிதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 189.63 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 83.93 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,23,430 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


