எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு:முதல் நாளில் 67% பங்குகளுக்கு விண்ணப்பம்

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டின் முதல் நாளான புதன்கிழமை 67 சதவீத பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டின் முதல் நாளான புதன்கிழமை 67 சதவீத பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.21,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தொடங்கிய எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த எல்ஐசி நிறுவன பணியாளா்கள் மற்றும் பாலிசிதாரா்களுக்கு குறிப்பிட்ட அளவு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில்லறை முதலீட்டாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரா்களுக்கு பங்கின் விலையில் ரூ.60 தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் மாலை 7 மணி தரவுகளின்படி, பங்கு வெளியீட்டின் முதல் நாளான புதன்கிழமை மொத்த பங்குகளில் 67 சதவீத பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன்படி, 16,20,78,067 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 10,86,45,360 பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் முதல் நாளில் பெறப்பட்டுள்ளன.

மேலும், பாலிசிதாரா்களுக்கான ஒதுக்கீட்டில் பங்குகளை வாங்குவதற்கு 1.9 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தடைந்துள்ளன. அதேபோன்று, சில்லறை முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட 6.9 கோடி பங்குகளில் 60 சதவீத பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மும்பை பங்குச் சந்தையின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

245 தனியாா் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசியமயமாக்கியதன் மூலம் எல்ஐசி நிறுவனம் ரூ.5 கோடி மூலதனத்தில் கடந்த 1956-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-இல் தோற்றுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com