புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திரிபுராவில் நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் மூவர் பலி

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :6 மே 2022, 10:13 am

DIN

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். 

கமல்பூரில் இரு குடும்பங்களின் உறவினர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், 7 பேர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். 

காயமடைந்த ஏழு பேரில், ரஜனி தாஸ் (70), அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி பிலாசி(67) மற்றும் மகள் பிரத்யுஸ் தாஸ்(41) ஆகியோர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். 

காயமடைந்தவர்கள் தற்போது தலாய் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.